Yarra Valley Water

Menu

Close menu
Quick exit

Tamil தமிழ்

WaterCare

வாழ்க்கை எப்போதும் திட்டமிட்டபடி செல்லாது. உங்களின் கட்டணப் பட்டியல்களை சரியான நேரத்திற்கு செலுத்துவதில் சிக்கல் இருந்தால், உங்களுக்கான சரியான தீர்வைக் கண்டறிய நாங்கள் உதவலாம்.

பல்வேறு பணம் செலுத்தல் ஏற்பாடுகள் முதல் கட்டணப் பட்டியல் நீட்டிப்புகள் மற்றும் சலுகைத் தள்ளுபடிகள் வரை, உங்கள் கட்டணப் பட்டியல்களை நிர்வகிக்க உங்களுக்கு உதவ எங்களிடம் பல்வேறு வசதிகள் உள்ளன.

உங்கள் தண்ணீர் மற்றும் கழிவுநீர் கட்டணப் பட்டியல்கள் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெற உதவ, எப்படி பணம் செலுத்துவது, எப்படி சேமிப்பது மற்றும் கிடைக்கும் ஆதரவைப் பெறுவது எப்படி என்று அறிய, ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் எங்களின் வளங்களைப் பயன்படுத்தவும்.

நீங்கள் எங்களுடன் தொலைபேசியில் பேச விரும்பினால், எங்களிடம் நான்கு மொழிகளில் பேசக்கூடிய ஆலோசகர்கள் உள்ளதுடன் இலவச மொழிபெயர்ப்பாளர் சேவைக்கான அணுகலும் உள்ளது.

1300 304 688 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும் அல்லது எங்களின் மீள அழைப்பதற்கான கோரிக்கைப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.

மீள அழைப்பதற்கான கோரிக்கைப் படிவம்

நெகிழ்ச்சியான கட்டண வசதிகள்

WaterCare உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பணம் செலுத்தும் வசதியையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது. உங்கள் கட்டணத்தைச் செலுத்த உங்களுக்கு உதவ எங்களிடம் பல வழிகள் உள்ளன. ஏனைய மாற்றுவழிகளுக்கு, 1300 304 688 என்ற எண்ணில் எங்களை அழைத்து, நாங்கள் எப்படி உதவுவோம் என்பதைத் தெரிந்துகொள்ளவும்.


பணம் செலுத்தும் திட்டத்தை அமைக்கவும்

சிறியளவில் மற்றும் அடிக்கடி பணம் செலுத்துவது உங்களுக்கு வசதியாக உள்ளதா? SmoothPay என்பது உங்கள் கட்டணப் பட்டியல்களை சிறிய அளவில் அடிக்கடி செலுத்துவதற்கான ஒரு வழியாகும்.

SmoothPay க்கு விண்ணப்பிக்கவும் அல்லது 1300 304 688 என்ற எண்ணில் எங்கள் குழுவை அழைக்கவும், உங்களுக்குப் பொருந்தும் ஒரு கட்டணத் திட்டத்தின் மூலம் உதவியைப் பெறுங்கள்.


கட்டண நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கவும்

உங்கள் கட்டணப் பட்டியல்களைச் செலுத்துவதற்கு இன்னும் சிறிது காலம் தேவைப்பட்டால், 30 நாட்கள் வரை கட்டண நீட்டிப்புக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

உங்களுக்கு சில தற்காலிக நிவாரணங்கள் தேவைப்பட்டால், இந்த விருப்பத்தை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

சலுகைகள்

தகுதியுடையவர் யார்?

Yarra Valley Water பின்வரும் அட்டைகளை வைத்திருப்பவர்களுக்கு சலுகைத் தள்ளுபடிகளை வழங்குகிறது.

Pensioner Concession Card
Centrelink Pensioner Concession Card
Pensioner Concession Card (2nd version)
Centrelink Pensioner Concession Card (2nd version)
Centrelink Healthcare Card
Centrelink Health Care Card
Department of Veteran Affair Health Card
Department of Veteran Affairs Pension Card
Department of Veteran Affair Health Card (2nd Version)
Department of Veteran Affairs Health Card (2nd Version)

உங்களிடம் இந்தக் அட்டைகளில் ஒன்று இருந்தால், உங்களின் சலுகையை எங்களிடம் பதிவு செய்ய வேண்டும்.

நீங்கள் ஒரு குடும்பத்திற்கு பல சலுகைகளைப் பதிவு செய்யலாம், இருப்பினும் தள்ளுபடி ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும்.


எவ்வளவு சலுகை கிடைக்கும்?

2023–24 க்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக $354.10 வரை தண்ணீர் மற்றும் கழிவுநீர்க் கட்டணங்களில் 50% குறைப்புக் கிடைக்கும்

தண்ணீர் மட்டும் போன்ற ஒரு சேவைக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்பட்டால், அதிகபட்சமாக $177.05 வரை தண்ணீர்க் கட்டணத்தில் 50% தள்ளுபடி பெறுவீர்கள்.

அட்டையின் தொடக்கத் தேதியிலிருந்து அல்லது உங்கள் அட்டை 12 மாதங்களுக்கு மேல் பழையதாக இருந்தால் 12 மாதங்கள் வரை கடந்தகால கட்டணப் பட்டியல்களுக்கு உங்களின் சலுகையை நாங்கள் பின்தேதியிட்டு, இந்தத் தொகையை உங்கள் கணக்கில் வரவு வைக்கிறோம்.


நான் எவ்வாறு பதிவு செய்வது?

உங்கள் சலுகையை yvw.com.au/concessions இணையத்தில் பதிவு செய்யலாம் அல்லது 1300 441 248 என்ற எண்ணில் எங்களை அழைக்கலாம்.

உங்களிடம் சலுகை அட்டை இல்லை என்றால், ஆனால் நீங்கள் தகுதியுடையவராக இருக்கலாம் என நினைத்தால், 13 10 21 ஊடாக சென்டர்லிங்கை அல்லது 03 9284 6000 ஊடாக படைவீரர் விவகாரத் துறையை தொடர்பு கொள்ளவும்.


நான் பதிவு செய்தவுடன் என்ன நடக்கும்?

உங்கள் சலுகை விவரங்களைப் பதிவுசெய்ததும், உங்கள் அட்டை செல்லுபடியாகாத நிலையை அடையும் வரை, உங்கள் அடுத்த கட்டணப் பட்டியலில் இருந்து சலுகைத் தொகையைக் கழிப்போம்.

பயன்பாட்டு நிவாரண மானியம்

நீங்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்து, உங்களுக்கு கூடுதல் நிதி உதவி தேவைப்பட்டால், மாநில அரசின் பயன்பாட்டு நிவாரண மானியத்திற்கு நீங்கள் தகுதியுடையவராக இருக்கலாம், உங்கள் Yarra Valley Water கட்டணப் பட்டியலில் $650* வரை தள்ளுபடியைப் பெறலாம்.


எப்படி விண்ணப்பிப்பது

ஒரு இரகசிய உரையாடலுக்கு 1800 994 789 என்ற எண்ணில் எங்களைத் தொடர்புகொண்டு ஒரு விண்ணப்பத்தைக் கோருங்கள் அல்லது yvw.com.au/urgs ஐப் பாருங்கள்

*நிபந்தனைகள் பொருந்தும்

வீட்டு வன்முறை மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான ஆதரவு

குடும்ப வன்முறை எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

குடும்ப வன்முறையை அனுபவிக்கும் மக்களுக்கு உதவ எங்களின் அர்ப்பணிப்புள்ள WaterCare ஆதரவுக் குழுவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் நிலைமையை நீங்கள் ஒருமுறை மட்டுமே விளக்க வேண்டும் மேலும் கூடுதல் ஆதாரம் தேவையில்லை.

நாங்கள் உங்களைப் புரிந்துணர்வுடனும் மரியாதையுடனும் நடத்துவோம், இந்த கடினமான சூழ்நிலையில் நாங்கள் உங்களுக்கு எப்படி உதவலாம் என்பதை விளக்குவோம், மேலும் உங்கள் விருப்பங்களைக் கருத்தில் கொள்ள உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு நேரம் கொடுப்போம்.


தொடர்பு கொள்ளுதல்

உங்கள் வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப உறுப்பினர் தண்ணீர் மற்றும் கழிவுநீர் கட்டணப் பட்டியல்களைச் செலுத்தாமல் விட்டுவிட்டாலோ அல்லது உங்கள் கணக்கில் கூடுதல் தனியுரிமை நடவடிக்கைகள் தேவைப்பட்டாலோ, எங்கள் அனுபவம் வாய்ந்த WaterCare  ஆதரவுக் குழுவை 1800 637 316 என்ற எண்ணில் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர்பு கொள்ளவும். 

நீங்கள் குடும்ப வன்முறையை சந்திக்கும் போது உதவியை நாடுவது சவாலாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினால், கீழே ஒரு அழைப்பைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும், எங்கள் பயிற்சி பெற்ற மற்றும் மரியாதைக்குரிய ஆலோசகர் ஒருவர் உங்களுக்கு அழைப்பை எடுப்பார்.

பணம் செலுத்துவதற்கான வழிகள்

Direct Debit - Direct Debit மூலம், உங்கள் கட்டணப் பட்டியல்கள் அவற்றின் நிலுவைத் தேதியில் தானாகவே செலுத்தப்படும்.
மாற்றாக, உங்கள் வங்கிக் கணக்கு, கிரெடிட் யூனியன் கணக்கு அல்லது விசா அல்லது மாஸ்டர்கார்டு ஆகியவற்றிலிருந்து தானியக்கமாக பணம் செலுத்துவதற்கும் நீங்கள் அமைக்கலாம்.


Electronic Funds Transfer (EFT) - உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்வதன் மூலம் உங்கள் தண்ணீர்க் கட்டணத்தைச் செலுத்துவதற்கு EFT அனுமதிக்கிறது.


BPAY - பில்லர் குறியீடு மற்றும் குறிப்பு எண்ணைக் கண்டறிய உங்கள் கட்டணப் பட்டியலில் BPAY லோகோவைத் பாருங்கள். நீங்கள் உங்கள் வங்கியை அழைக்க வேண்டும் அல்லது உங்கள் இணைய வங்கியில் உள்நுழைந்து, BPAY அல்லது கட்டணப் பட்டியல் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.


Credit card - கிரெடிட் கார்டு மூலம் இணையத்தில் அல்லது தொலைபேசியில் பணம் செலுத்தலாம். விசா அல்லது மாஸ்டர்கார்டு மூலம் 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் பணம் செலுத்த 1300 362 332ஐ அழைக்கவும். AMEX மற்றும் Diners Club ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை நினைவில் கொள்ளவும்.


AusPost Billpay - காசு, காசோலை அல்லது கிரெடிட் கார்டு மூலம் எந்த ஆஸ்திரேலியா தபால் அலுவலகத்திலும் நேரில் பணம் செலுத்துங்கள்.
உங்கள் கட்டணத்தைச் செயல்படுத்த பார்கோடு தேவைப்படும் என்பதால், உங்களின் கட்டணப் பட்டியலின் நகலை உடன் வைத்திருக்க மறக்காதீர்கள்.


Centrepay - சென்டர்லிங்க் வாடிக்கையாளர்கள் தங்கள் சென்டர்லிங்க் பணம் செலுத்தல்கள் மூலம் வழமையான குறைப்புக்களை அமைக்கலாம்.
பணம் செலுத்துதல் மற்றும் வரவுசெலவுத் திட்டத்தை இன்னும் எளிதாக்குவதற்கு, SmoothPay ஏற்பாட்டுடன் இதை இணைக்க நீங்கள் தேர்வுசெய்யலாம்.

Centrepay அமைக்க, நீங்கள் Centrelink ஐ தொடர்பு கொண்டு, அவர்களுக்கு Yarra Valley Water வாடிக்கையாளர் குறிப்பு எண்: 555 054 118T ஐ வழங்க வேண்டும்.

கோப்புகள் பதிவிறக்கம் செய்ய கிடைக்கின்றன